சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
சென்னை நகரில் திடீரென பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை மற்றும் குறைந்த காட்சி தூரம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கொழும்பு, பெங்களூரு, ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
கனமழையால் ஓடுதள பகுதியில் பார்வைத்திறன் குறைந்ததால், விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிரமம் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல விமானங்கள் சென்னை வான்வெளியில் சுற்றிவந்த பின்னரே தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சென்னை விமான நிலையம் இலிருந்து புறப்பட வேண்டிய சில விமானங்களும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவும் மழை காரணமாக விமான அட்டவணைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – வழக்கறிஞர் எம்.வேல்முருகன்
