Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று இரவு கேரளா செல்கிறார் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர்!

இன்று இரவு கேரளா செல்கிறார் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர்!

-

- Advertisement -

இன்று இரவு கேரளா செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் அரலோகர். கேரளாவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகே தமிழ்நாடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.இன்று இரவு கேரளா செல்கிறார் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர்!தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று இரவு கேரளா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தகவலின்படி, ஆளுநர் அர்லேகர் இன்று மாலை 7 மணி அளவில் திருவனந்தபுரம் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே அவர் மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இதுவரை மூன்று முறை ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், சட்டப்பேரவையில் தெளிவான பெரும்பான்மை இல்லாத காரணத்தால், பதவியேற்பு தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த அழைப்பையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம், தமிழக அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

விசிக ஆதரவு உறுதியாகும் பட்சத்தில், உடனடியாக ஆதரவு கடிதங்களுடன் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் – ரவிக்குமார்

MUST READ