Homeசெய்திகள்அரசியல்அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் யார்? - 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் யார்? – 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

-

- Advertisement -

அதிமுகவின் சட்டப்பேரவை குழு தலைவர் யார் என்ற கேள்வி, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவு காரணமாக, இத்தேர்வு குறித்த குழப்பங்கள் நிலவுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் யார்? - 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

தமிழக அரசியலில் அதிமுகவின் உள்கட்சி நிலைமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கட்சிக்குள் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

அதிமுக சார்பில் மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டுமென 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வாக குறைந்தபட்சம் 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அணிக்கு கட்சிக்குள் முழுமையான ஆதரவு இல்லை என்ற அரசியல் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனக்கு 35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அதிமுகவில் புதிய அதிகாரப் போட்டிக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இந்த உள்கட்சி பிளவு வெளிப்படையாக தெரிந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவாகவும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக பேரவைக்கு சென்றது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட மோதல் காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வலுவான ஆதரவாக இருந்த எஸ்.பி. வேலுமணி, தற்போது அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் மீண்டும் அதிகார மையப் போட்டி உருவாகியுள்ளதாகவும், இது அதிமுகவில் புதிய பிளவுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, “அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. அனைவரும் ஒன்றாகவே உள்ளோம்” என்று தெரிவித்தார். ஆனால், எதற்காக இரு பிரிவாக பேரவைக்கு சென்றீர்கள்? எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேசாமல் இருந்தது ஏன்? என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனால், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நிலவும் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது. வருகிற நாட்களில் கட்சியின் உள்நிலைமை எந்த திசையில் செல்லும் என்பது தமிழக அரசியலில் முக்கிய கவனப்பொருளாக மாறியுள்ளது.

எச்சரித்தும் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்… கோதாவில் லீமா ரோஸ்

MUST READ