ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வியாபாரிகள் பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்குமாரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் ஆவடி புதிய புதிய இராணுவச்சாலையில் (N.M.ரோடு) நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்து வருகின்றோம். முறையாக சொத்துவரி, மின் கட்டணம், வணிக உரிமம், உட்பட பல்வேறு வரிகளை அரசுக்கு செலுத்தி வருகின்றோம். கடைகளை முறைப்படி கிரையம் பெற்று நீண்ட காலமாக ஆண்டு அனுபவித்து விடுகின்றோம். அதற்கான கிரையப் பத்திரம் எங்களிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென்று யாரும் இல்லாத போது கடைகளின் சுவற்றில் அளவீடு செய்து அம்புக் குறியீட்டு சென்றுள்ளனர்.

இதைப் பார்த்தவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதிலிருந்து மீள்வதற்குள் பார்வையில் கண்ட நோட்டீஸ் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று (19.05.2026) மதியம் கொடுக்கப்பட்டது. அதில் 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. எங்களுக்கு போட்டியாக உள்ளது. நாங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என அஞ்சுகின்றோம். மேலும் இந்த நோட்டீஸ் N.M.ரோட்டில் வடக்கு பகுதியில் முழுமையான இல்லாமல் நடுவில் சில குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டும் அரசு மருத்துவமனை வரை வழங்கப்பட்டுள்ளது. வணிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வணிகர்களை பிரித்தாலும், சூழ்ச்சியோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அகலப்படுத்தும் பணி எனில் நெடுஞ்சாலைத்துறையின் N.M.ரோட்டின் வடக்கு பகுதி முழுவதுமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். வடக்கு பகுதியில் குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதில் ஏதோ உள் நோக்கம் இருப்பது போல் தோன்றுகின்றது. மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களது அரசில் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அரசு நிலத்தில் வருடக்கணக்கில் சட்டப் பூர்வமாக மின் இணைப்பு பெற்று வீட்டு வரி ஆவணம் உள்ளவர்களுக்கு பட்டா முறைப்படுத்தப்பட்டு என முதல்வர் தளபதி விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அய்யா எங்களது வாழ்வாதாரம்,எதிர்காலம், குடும்பம் அனைத்தும் இந்த கடைகளை நம்பித்தான் உள்ளது. இந்த நிலையில் எங்களது கடைகளுக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடும். எனவே அய்யா தாங்கள் இதில் தலையீட்டு நெடுஞ்சாலைத்துறைகளின் இந்த அறிவிப்பை தடுத்து நிறுத்தி எங்களது அனைத்து வணிகர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றி எங்களது குடும்பத்தை வாழ வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். துரிதமாக இதை தடுத்து நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
