Homeசெய்திகள்இந்தியா“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்” ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம் – இளைஞர்கள் அதிர்ச்சி

“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்” ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம் – இளைஞர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “COCKROACH JANATA PARTY”-ன் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்து. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டிக்கும் நெட்டிசன்கள், இது இளைஞர்களின் குரலை முடக்கும் சதியா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்” ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம் – இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சி

இந்திய அரசியலில் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெறும் நான்கு நாட்களில் தேசிய அரசியல் கட்சிகளையே முந்தி பேசப்படும் இயக்கமாக மாறியுள்ளது ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP). வேலையில்லா இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என விமர்சித்ததாக சர்ச்சைக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறிய கருத்தை நையாண்டி செய்யும் வகையில் உருவான இந்த இன்ஸ்டாகிராம் இயக்கம், இளைஞர்கள் மத்தியில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.

we-r-hiring

மே 15, 2026 அன்று போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, தலைமை நீதிபதி சூர்ய காந்த், “வேலையில்லாமல் எந்தத் தொழிலும் செய்யத் தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப்போல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்” எனக் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பின்னர், “நான் போலிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன்; அனைத்து இளைஞர்களையும் அல்ல” என அவர் விளக்கம் அளித்திருந்தாலும், விவாதம் அடங்கவில்லை.

இந்த சூழ்நிலையில்தான், அபிஜீத் திப்கே என்ற 30 வயது இளைஞர், மே 17 அன்று இன்ஸ்டாகிராமில் ‘Cockroach Janata Party (CJP)’ என்ற பக்கத்தை தொடங்கினார். “சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்தப் பக்கம், சில மணி நேரங்களிலேயே வைரலானது. வேடிக்கையான மீம்கள், அரசியல் நையாண்டிகள் மற்றும் இளைஞர்களின் ஏமாற்றங்களை பிரதிபலிக்கும் பதிவுகள் காரணமாக, பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஒருகட்டத்தில், இந்தியாவில் அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி-யின் அதிகாரப்பூர்வ பக்கத்தையே CJP முந்தியது.

பாஜகவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 8.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்த நிலையில், CJP வெறும் நான்கு நாட்களில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்று புதிய டிஜிட்டல் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் பக்கம் வெறும் நகைச்சுவை பதிவுகளால் மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் ஜனநாயக அமைப்புகளை விமர்சிக்கும் கருத்துகளாலும் கவனம் ஈர்த்துள்ளது.

அதில் வெளியிடப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடன் அரசியல் பதவிகள் வழங்கக் கூடாது
  • வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • கட்சி தாவும் எம்.எல்.ஏ, எம்.பி-க்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தல் தடை விதிக்க வேண்டும்
  • நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், போன்ற கருத்துக்கள் இளைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

CJP-யை தொடங்கிய அபிஜீத் திப்கே, முன்பு ஆம் ஆத்மி கட்சி-யின் சமூக வலைதள நிர்வாகியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் இந்த இயக்கம் குறித்து அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இளைஞர்களிடையே வேகமாக பிரபலமான CJP-யின் X (ட்விட்டர்) கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. “சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகள்” என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இது இளைஞர்களின் குரலை அடக்கும் முயற்சியா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு உருவான இந்த இயக்கம், இன்றைய இளைஞர்களின் மனநிலையையும் அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் ஒரு புதிய டிஜிட்டல் அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வெறும் நான்கு நாட்களில் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை சவாலுக்கு உள்ளாக்கியிருப்பது, இந்திய அரசியலில் சமூக ஊடகங்களின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது.

இனி கைரேகை இல்லை…கையெழுத்திடுவோம்…பள்ளிச் சீருடையில் கலக்கும் தாத்தா பாட்டிகள்…

MUST READ