Homeசெய்திகள்தமிழ்நாடு“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” - முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” – முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு ஊழல் செய்ததாக விமர்சித்துள்ள  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகளை ஏமாற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி இது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” - முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

we-r-hiring

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று த.வெ.க அரசு வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரூ.50 ஆயிரம் வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், “200 யூனிட் வரை இலவச மின்சாரம்” என்று கூறிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அந்த சலுகை கிடையாது என்று பின்னர் நிபந்தனை விதித்ததாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். “இப்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM செய்கிறார்கள். இன்னும் எத்தனை ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் CM saar?” என்று முதலமைச்சர் விஜயை நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலுமணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. அம்பாசமுத்திரம் MLA இசக்கி சுப்பையா ராஜினாமா!

MUST READ