Homeசெய்திகள்தமிழ்நாடுவைக்கோவின் அடுத்த அரசியல் முடிவ என்ன? பரபரப்பை கிளப்பிய முதல்வர் சந்திப்பு…

வைக்கோவின் அடுத்த அரசியல் முடிவ என்ன? பரபரப்பை கிளப்பிய முதல்வர் சந்திப்பு…

-

- Advertisement -

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வைகோவை நேரில் சந்தித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.வைக்கோவின் அடுத்த அரசியல் முடிவ என்ன? பரபரப்பை கிளப்பிய முதல்வர் சந்திப்பு…

இந்த சந்திப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வைகோ தனது கருத்துகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் புதிய உற்பத்தி திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

we-r-hiring

மற்றொரு புறம், மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் கட்சி தொடர வேண்டுமா அல்லது தனிப்பாதையை தேர்வு செய்ய வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்தை சில நிர்வாகிகள் முன்வைத்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நேரத்தில் வைகோ சமரச நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்பட்டாலும், பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. எனினும், கூட்டணியில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டாலும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அரசியல் நோக்கில் அத்தகைய முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கூட்டணி மாற்றம் அல்லது தனித்த அரசியல் பாதை போன்ற முடிவுகள் கட்சியின் எதிர்கால வளர்ச்சியிலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நிலைப்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வரவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தின் முடிவுகள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பார்வையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

MUST READ