பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக உதவி எண் 1091 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உடனடி உதவியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சிங்கப்பெண் படையின் தலைவரும், காவல்துறை ஐ.ஜி.யுமான பவானீஸ்வரி, அவசர காலங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் காவல்துறை உதவி எண் 100-ஐயும் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பெண் படைக்கான 1091 உதவி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 112 அவசரகால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உதவி கோரும் அழைப்புகள் விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்புப் படை, பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய உதவி எண் அறிமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு
