மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது (Ease of Doing Business) குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து மத்திய அமைச்சகங்களின் செயலாளர்களுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
செஷல்ஸ் நாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பிய பிரதமர், கடந்த இரண்டு மாதங்களில் மத்திய உயர் அதிகாரிகளுடன் நடத்தும் இரண்டாவது முக்கிய சந்திப்பு இதுவாகும். இந்தியாவில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான வழிமுறைகளை மேலும் எளிதாக்குவது. அரசு கோப்புகள் தேக்கமடையாமல் விரைந்து முடிவெடுப்பது மற்றும் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறனை வெளிப்படுத்துவது.

அமைச்சரவை மாற்ற வதந்திக்கு மத்தியில் முக்கியத்துவம்
முன்னதாக கடந்த மே 21-ல் நடைபெற்ற கூட்டத்தின் போது, மோசமாகச் செயல்பட்ட சில அமைச்சகங்களை மேம்படுத்திக்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். தற்போது மத்திய அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 41 இணையமைச்சர்கள் உள்ள சூழலில், விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறக்கூடும் என்ற தகவல்களுக்கு இடையே இந்த கூட்டம் நடப்பதால் நிர்வாக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு: ‘பணம் எண்ணப்பட்டது எப்படி?’ – சம்பத் ராயிடம் தீவிர விசாரணை!
