Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

-

- Advertisement -
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை டோரி போவி இளம் வயதில் மரணம் அடைந்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

மிசிசிபி மாகாணத்தில் பிறந்து வளர்ந்த டோரி போவி ஆரம்பத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக வளம் வந்தார். பின்னர் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டதன் பயனாக மாநில அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் நீலம் தாண்டுதல் ஆகியவற்றில் பதக்கங்களை வென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமெரிக்காவின் 100 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து 2017 லண்டனில் நடைபெற்ற உலக தடைகளை போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் என்று உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

இந்நிலையில் 32 வயதான அவர் உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள வீட்டில் இறந்த நிலையில் போவி உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம் இறப்புக்கு சந்தேகப்படுபடியான காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்மையான காரணத்தை அறிய அவரது ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

MUST READ