spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“  அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரினால் இரு நாடுகளுக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இருந்தபோதிலும் இரு நாடுகளும் தீவிரமாக போரை தொடர்ந்து வருகின்றன. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எல்லை தாண்டி தாக்கும் தங்களின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று மேற்குலக நாடுகள் அனுமதி கொடுத்ததை அடுத்து நிலைமை தீவிரமாக மாறியது. உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் சூழலில், ரஷ்யாவும் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“  அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...

we-r-hiring

ஏற்கனவே ரஷ்யா சக்திவாய்ந்த நாடாக இருந்துவருகிறது. இந்தச் சூழலில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் போர்களத்தில் குதித்தது. உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்ட வடகொரியாவுக்கு ரஷ்யாவுடன் மட்டும் எப்போதும் நல்லுறவு இருந்துள்ளது. தேவையான சூழலில் வடகொரியாவுக்கு பல நல்லுதவிகளை ரஷ்யா செய்துள்ளதால், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிபர் கிம் ஜாங் உன் தனது படைகளை அனுப்பியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் முதலே வடகொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு, ரஷ்ய ராணுவத்தின் உடை வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“  அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...

10,000 வடகொரிய வீரர்கள்:

அந்தவகையில் சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் குர்ஸ்கிலில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், முறையான போர் பயிற்சி இல்லாததால் வடகொரிய வீரர்கள் திணறி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போராடும் வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதில், போர்க்களத்தில் இருக்கும் வடகொரிய வீரர்களை, ஒருவேளை உக்ரைன் சுற்றி வளைத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் உத்தரவிடிருக்கிறாராம்.

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“  அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...

தற்கொலை செய்துகொள்ளுங்கள் :

வடகொரிய வீரர்கள் உக்ரைனிடம் உயிருடன் சிக்கினால் தேவையில்லாத பிரச்சினை வரும் என்பதாலேயே இப்படியொரு உத்தரவை கிம் பிறப்பித்திருப்பதாக தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உளவு அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ள தென்கொரிய எம்பி லீ சியோங்-குவ்ன், “போரில் உயிரிழந்து கிடந்த வீரர்களை உக்ரைன் ஆய்வு செய்துள்ளது. அதில் வடகொரிய வீரர்களிடம் சில குறிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதில் உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலைப் படையைப் போல வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“  அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி...

உக்ரைன் வைக்கும் செக் :

என்ன தான் வடகொரிய அரசு இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தாலும், உக்ரைன் படைகள் பல வடகொரிய வீரர்களை உயிருடன் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா வசம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவித்தால், தாங்களும் வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி அறிவித்துள்ளார். மேலும் அவர், போர் தீவிரமாக தொடர்வதால் வரும் காலத்தில் இன்னும் அதிகளவில் வடகொரிய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கலாம் என்றும், ரஷ்யா அவர்கள் வசம் இருக்கும் எங்கள்(உக்ரைன்) வீரர்களை விடுவித்தால் எங்களிடம் உள்ள வடகொரிய வீரர்களை நாங்களும் விடுவிப்போம் என்று தெரிவித்தார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க வடகொரியாவின் இந்த அதிரடி உத்தரவால் இதுவரை சுமார் 300 வடகொரிய வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த உத்தரவுகளையும் தாண்டி ஏராளமான வடகொரிய வீரர்களை உக்ரைன் உயிருடன் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

MUST READ