”தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… ஆனா.. தமிழ விட்டுட்டு வரல” என்று சான் பிரான்சிஸ்கொவில் வசிக்கும் தடிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தி திணிப்புக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.”தமிழ் வாழ்க, தமிழ் ஓங்குக, இந்தியை தினிக்காதே” என கோஷங்களை எழுப்பி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கொவில் வசிக்கு தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ”மொழி என்பது அறிவு அல்ல, மொழி என்பது புலமை, ஒரு மொழியை தினிப்பதனால் அறிவு வளராது. அறிவு வேறு புலமை வேறு. மொழியை எப்படி வேண்டுமாலும் கற்றுக்கொள்ளாம். நாங்கள் தழிழ் நாட்டை விட்டுதான் வந்துள்ளோமே தவிற தமிழை விட்டு வரவில்லை. தமிழர்கள் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் மொழி தினிப்பிற்கு எதிரானவர்கள். உலக மொழிகளிலேயே தொன்மைவாய்ந்த மொழி நமது தாய்மொழியாம் தமிழ் , மொழி என்பது நமது கலாச்சாரம், பண்பாட்டு, வரலாற்றுடன் ஒன்றுபட்டது. எங்களுடன் பேச தமிழும், உலக நாடுகளுடன் பேச ஆங்கிலமும் போதும்” என அமெரிக்க வாழ் தமிழர்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.