Homeசெய்திகள்தமிழ்நாடுவீரவநல்லூர் தந்தை - மகன் படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை - எஸ்.பி...

வீரவநல்லூர் தந்தை – மகன் படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை – எஸ்.பி விளக்கம்..!

-

- Advertisement -

வீரவநல்லூர் தந்தை - குழந்தை படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை - எஸ்.பி விளக்கம்..!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில், சந்தேகத்திற்கு இடமான சில நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் அதிகாரப்பூர்வ கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

​நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் நேற்று மாலை தனது மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த பயங்கரவாத கும்பல் ஒன்று, காளிமுத்துவின் பைக் மீது காரை ஏற்றி மோதியுள்ளது. இதில் காளிமுத்து மற்றும் அவரது இரண்டு மகன்களும் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.

வீரவநல்லூர் தந்தை - குழந்தை படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை - எஸ்.பி விளக்கம்..!

​துண்டிக்கப்பட்ட தலை;நடுரோட்டில் வீசிச் சென்ற கும்பல்

இந்தக் கோர விபத்தில் காளிமுத்துவின் 5 வயது மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தான். காரில் இருந்து இறங்கிய அந்தக் கும்பல், கீழே விழுந்து கிடந்த காளிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி, அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாகப் படுகொலை செய்தது. மேலும், காயமடைந்து கிடந்த மற்றொரு மகனான சின்னத்துரையின் வலது காலிலும் இரண்டு இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

​பின்னர், காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மூலச்சி கிராமத்திற்குச் சென்ற அக்கும்பல், அங்கிருந்த பொதுமக்களிடம் அதைக் காட்டி மிரட்டியுள்ளது. தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை மாநில நெடுஞ்சாலையின் நடுரோட்டில் அந்தத் தலையை வைத்துவிட்டுத் தப்பியோடியதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

வீரவநல்லூர் தந்தை - குழந்தை படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை - எஸ்.பி விளக்கம்..!

​எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி நேரில் ஆய்வு:

இக்கொடூர இரட்டைக் கொலை சம்பவம் குறித்துத் தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

​இன்று மூலச்சி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி கூறியதாவது: ​”தந்தை – மகன் படுகொலை செய்யப்பட்ட இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்திற்கு இடமான சில நபர்களைப் பிடித்துத் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்படவில்லை. விசாரணை முழுமையாக முடிந்தவுடன் முறையான கைது நடவடிக்கை இருக்கும்.

​ஏற்கனவே கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலைச் சம்பவத்தோடு இந்த ஊரில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும், இந்த கிராமம் தொடர்ந்து காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில்தான் இருந்து வந்தது. அதையும் மீறி தற்பொழுது இந்த துரதிர்ஷ்டவசமான இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது.

வீரவநல்லூர் தந்தை - குழந்தை படுகொலை: ​6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை - எஸ்.பி விளக்கம்..!

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை:

இச்சம்பவத்தை நேரில் கண்ட காளிமுத்துவின் மற்றொரு மகன் கொடுத்த தகவலையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த கொடூரப் பின்னணியில் கூடுதல் நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், அப்பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம். தற்போது விசாரணை போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதால், சந்தேக நபர்களின் பெயர்களைக் கூற இயலாது. அது விசாரணையைப் பாதிக்கும். கைது நடவடிக்கை முடிந்தவுடன் முழு விபரங்களும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

MUST READ