Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

-

- Advertisement -

தனது அண்ணனைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​
புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!
​புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் (J.M. 1 Court) இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் அவரது வழக்கறிஞர் அஜித்குமார் ஆஜரானார். ​இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்து பிறப்பித்த உத்தரவின் நகலை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ​உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகலை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தமிழக அமைச்சர் மரிய வில்சன், தனது சொந்த அண்ணனைத் தாக்கியதாகப் புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

​162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!

MUST READ