Homeசெய்திகள்க்ரைம்திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர்...

திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள சித்தூர் பகுதியில் பெண் குழந்தைகள் தங்கிப் படித்து வரும் குழந்தைகள் இல்லம் (பாதுகாப்பு மையம்) ஒன்று இயங்கி வருகிறது. இந்த இல்லத்தின் வார்டனாக மெர்சி அன்னபூரணி (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினராக இருக்கும் ராஜசக்திவேல் (44) என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இவர் முன்னதாக இதே காப்பகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இல்லத்தில் தங்கி அருகிலுள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியிடம், ராஜசக்திவேல் தனது அறைக்குத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டி, பயத்தை ஏற்படுத்தி பலமுறை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!

இக்கொடூரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் (36), பேரையூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ​இப்புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜசக்திவேல் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த வார்டன் மெர்சி அன்னபூரணி ஆகிய இருவர் மீதும் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், இந்த இல்லத்தில் தங்கியிருந்த மற்ற 16 பெண் குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு, வேறு ஒரு பாதுகாப்பான முகாமிற்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் அந்த குழந்தை பாதுகாப்பு இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர். ​தற்போது தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளி ராஜசக்திவேல் மற்றும் வார்டன் மெர்சி அன்னபூரணி ஆகியோரைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவான மெர்சி அன்னபூரணியின் கணவர் சார்லஸ் என்பவரைப் பிடித்து பேரையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!

we-r-hiring

MUST READ