HomeBreaking Newsஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்

-

- Advertisement -

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள், கல்லிப்பட்டி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு ஜீப்பில் சென்றுவிட்டு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

we-r-hiring

​கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஜீப்
​இவர்களது வாகனம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் கொடூரத்தால் ஜீப் பலத்த சேதமடைந்தது.
​இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த ஓட்டுநர் பூபதி, வாகனத்தில் பயணித்த கார்த்திக் மற்றும் அங்காளஈஸ்வரி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி
​விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம்பட்டி போலீஸார் மற்றும் அக்கம் பக்கத்தினர், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த, சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் காவ்யா, தனலட்சுமி, மகன் அஸ்வின் உறவினர் லட்சுமி ஆகிய 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவிலுக்குச் சென்றுவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ