Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லியில் ஜூலை 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்! தமிழகத்திற்குரிய நீரை கேட்டுப் பெறுமா அரசு?

டெல்லியில் ஜூலை 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்! தமிழகத்திற்குரிய நீரை கேட்டுப் பெறுமா அரசு?

-

- Advertisement -

காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்பார்ப்பையும் தூண்டும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லியில் வரும் ஜூலை 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 53-வது கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இரு மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், துறை சார்ந்த வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.டெல்லியில் ஜூலை 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்! தமிழகத்திற்குரிய நீரை கேட்டுப் பெறுமா அரசு?கர்நாடகாவின் பிடிவாதம் – தமிழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
நடப்பு பாசனப் பருவத்தில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய காவிரி நீரைத் திறந்து விடத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. தங்களது மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்ற வழக்கமான காரணத்தைக் கூறி கர்நாடகா பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இந்த 53-வது ஆணையக் கூட்டம் தமழ்நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், தமிழக அரசு இந்த கூட்டத்தில் தனது வலுவான வாதங்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

we-r-hiring

தமிழக அரசு கேட்டுப் பெறுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரின் நிலுவையை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளது.

“ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, கர்நாடகாவிடமிருந்து உரிய தண்ணீரைத் தமிழக அரசு கேட்டுப் பெறுமா?” என்ற பெரும் எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் டெல்டா பகுதி விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை விவகாரம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

MUST READ