spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் இன்று 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

-

- Advertisement -

 

நாடு முழுவதும் இன்று 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!
File Photo

‘National Testing Agency’ எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.

we-r-hiring

“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!

நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதவுள்ளனர். இந்தியா முழுவதும் சுமார் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று (மே 07) பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெறவிருக்கும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, தேர்வர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பேனா, பென்சில், கால்குலேட்டர், பென் டிரைவ், ப்ளூடூத், ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன் உள்ளிட்டவைகளை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதியில்லை. எனினும், குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது.

“கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல”… நடிகை சித்தி இத்னானி விளக்கம்!

மேலும், மாணவ, மாணவியர்களுக்கு சில ஆடைக் கட்டுப்பாடுகளும் உள்ளது. தேர்வு முடியும் வரை, தேர்வு அறையை விட்டு வெளியேற மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய 13 பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ