Homeசெய்திகள்அரசியல்"தவெக பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள்!" – அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும்...

“தவெக பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள்!” – அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் நிர்வாகிகள் எச்சரிக்கை!

-

- Advertisement -

​கட்சியிலும் பதவியிலும் அங்கீகாரமின்றித் தவிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புலம்பல்!"தவெக பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள்!" – அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் நிர்வாகிகள் எச்சரிக்கை!அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அங்கு உரிய மரியாதையும் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்றும், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் தவெக பக்கம் செல்ல வேண்டாம் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் தவெகவுக்குச் சென்ற அதிமுக நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​பதவியும் இல்லை, அங்கீகாரமும் இல்லை
​அதிமுகவில் செல்வாக்குடன் விளங்கிய முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நிர்வாகத் திறமையையும் அனுபவத்தையும் நம்பி தவெகவிற்குச் சென்றனர். ஆனால், தவெகவில் உள்ள இளம் தலைமுறையினர் மூத்த தலைவர்களின் அனுபவத்தை மதிக்காமல் அவர்களை ஒதுக்கி வைப்பதாகப் புலம்பல்கள் எழுந்துள்ளன. ​கட்சி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், கட்சித் தலைமையையோ அல்லது அமைச்சர்களையோ நேரில் சந்திக்க அனுமதி கிடைக்காமல் டம்மி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். "தவெக பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள்!" – அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் நிர்வாகிகள் எச்சரிக்கை!

we-r-hiring

​அதிமுக – தவெக அரசியல் பின்னணி
​முன்னதாக அதிமுகவிலிருந்து 25 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்ட போது, தோழமைக் கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் முயற்சி கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியும் முடங்கியது. ​தற்போது தவெகவில் பதவி மற்றும் அதிகாரங்கள் தங்களுக்கு வழங்கப்படாததால், அதிமுகவில் இருந்து மேலும் நிர்வாகிகள் யாரும் தவெக பக்கம் சென்று தங்களது அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

​திரும்பச் செல்ல முயலும் நிர்வாகிகள்
​தவெகவில் நிலவும் இந்த அதிருப்தி சூழலால், அங்கிருக்கும் முன்னாள் நிர்வாகிகள் பலர் மீண்டும் அதிமுகவிற்கே திரும்ப எண்ணி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். இருப்பினும், கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ​சொந்த மாவட்டங்களில் ‘ராஜா’ போன்று வலம் வந்த அதிமுக தலைவர்கள், தவெகவில் உரிய இடமின்றி தவித்து வருவதைக் கண்டு, மற்ற அதிமுக நிர்வாகிகளும் தவெக பக்கம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு ரிவர்ஸ் கியர் போட்டு மீண்டும் தாய் கழகத்திலேயே தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அச்சுறுத்தல்களுக்கு திமுக அஞ்சாது”: தவெக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து ஆர்.எஸ்.பாரதி காரசாரம்!

MUST READ