Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லி தடியடி சம்பவம்.. தமிழகத்தில் வெடித்த கொந்தளிப்பு! பாவலர் பாலன் இல்லத்தில் கூடும் இளைஞர்கள்!

டெல்லி தடியடி சம்பவம்.. தமிழகத்தில் வெடித்த கொந்தளிப்பு! பாவலர் பாலன் இல்லத்தில் கூடும் இளைஞர்கள்!

-

- Advertisement -

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.டெல்லி தடியடி சம்பவம்.. தமிழகத்தில் வெடித்த கொந்தளிப்பு! பாவலர் பாலன் இல்லத்தில் கூடும் இளைஞர்கள்!சென்னை தியாகராய நகரில் உள்ள பாவலர் பாலன் இல்ல வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கப்பட்ட இளைஞர்களின் தொடர் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பேரணி மீது தடியடி!
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி அமைப்பினர் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை நடத்திய திடீர் தடியடியில், போராட்டக்காரர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு – இளைஞர்கள் கொந்தளிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினரும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்ல வளாகத்தில் திரண்ட ஏராளமான இளைஞர்கள், நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பிரபாகரன், ஆதித்தியன் மற்றும் ஸ்டேலினா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையிலும், நீட் தேர்வை முழுமையாகத் தடை செய்யும் வரையிலும் எங்கள் போராட்டம் ஓயாது; தொடர்ந்து தீவிரமாக நடைபெறும்,” என உறுதியளித்தனர்.

 தீவிரமடையும் போராட்டங்கள்
டெல்லி தடியடி சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், கல்லூரிகள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளின் சார்பிலும் கண்டனப் போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதனால் நீட் எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணிகள் நிரப்பப்படும்: முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தின் விவரம்!

MUST READ