- Advertisement -
கல்குவாரியில் பாறை சரிந்து இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் 100 அடி பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
காட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞர் பொக்லைன் வாகன ஓட்டுனராக புதுக்கோட்டை அருகே இயங்கி வரும் கல்குவாரியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று பாறை உடைக்கும் பணிகள் ஈடுபட்டபோது திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 100 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு குழுவினர் 9 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் கல்குவாரியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்.
உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கனிமவளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.