கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழைவதற்குத் தடை விதித்து, அவர்களை உள்ளே செல்ல விடாமல் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்ப பகுதியில் கடுமையான பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
போராட்டத்திற்கான பின்னணி
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டித்தும், உயர்நீதிமன்றத்தின் முறையான உத்தரவுகளைத் தொடர்ந்து மீறிச் செயல்பட்டு வரும் மாவட்டக் காவல்துறையைக் கண்டித்தும் இந்த வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

முழக்கங்களும், மறியலும்
நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் திரண்ட ஏராளமான வழக்கறிஞர்கள், காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை மதிக்காமல் செயல்படும் மாவட்டக் காவல் துறைக்கு எதிராகவும் கண்டனக் முழக்கங்களை எழுப்பினர். வழக்கமான பாதுகாப்புப் பணியைத் தவிர்த்து, மற்ற காரணங்களுக்காகக் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குள் நுழையக் கூடாது எனத் தடை விதித்து, உள்ளிருப்பு மற்றும் தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காவல்துறையினரை வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
