Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட...

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

-

- Advertisement -

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

we-r-hiring

ஒப்பந்தமும் பணப் பரிவர்த்தனையும்
மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வான சண்முகன், பொறியாளராகக் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவருடன் இணைந்து கட்டுமானப் பொருள் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்காக, மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வர்மன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டார். ஈரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொழிலதிபர் வர்மன் தரப்பில் எம்.எல்.ஏ. சண்முகன் மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோரிடம் பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.2 கோடி பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல்
பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் நீண்ட காலமாகத் தொழிலைத் தொடங்காமல் சண்முகன் காலம் தாழ்த்தியதால், தொழிலதிபர் வர்மன் தந்து பணத்தைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தினார். இதன் பேரில் 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மூன்று தவணைகளாக ரூ.35 லட்சத்தை மட்டும் சண்முகன் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனால், மீதமுள்ள ரூ.1 கோடியே 65 லட்சத்தைத் தராமல் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சண்முகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதன் பின்னர், வர்மனின் பிரதிநிதியான ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீதிப் பணத்தைக் கேட்கச் சென்றுள்ளார். அப்போது, “நான் இப்போது சட்டமன்ற உறுப்பினர்; உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள். பணத்தைத் தர முடியாது” எனக் கூறி எம்.எல்.ஏ. சண்முகன் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!

எஸ்பி அலுவலகத்தில் புகார் & முதலமைச்சருக்கு மனு
எம்.எல்.ஏ.வின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த மலேசியத் தொழிலதிபர் வர்மன் தரப்பு, தனது பிரதிநிதி சிவக்குமார் மூலமாக ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளது. அம்மனுவில், எஞ்சியுள்ள ரூ.1.65 கோடி பணத்தை மீட்டுத் தருவதோடு, கொலை மிரட்டல் விடுத்த தவெக எம்.எல்.ஏ. சண்முகன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சருக்கும் தனியாகப் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதிநிதி சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!

MUST READ