Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின்...

தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

-

- Advertisement -

“தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை” எனச் சாடல்!தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் ‘வந்தே மாதரம் மசோதா’ (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது ஒரு மிகப்பெரிய “அரசியல் சட்ட மோசடி” என்றும் தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சாடியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த மசோதாவிற்கு எதிரான பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும் தி.மு.க.வின் நிலைப்பாட்டையும் விரிவாக எடுத்துரைத்தார்.

we-r-hiring

“வரலாற்றைத் திரிக்கும் மத்திய அரசு!”
செய்தியாளர் சந்திப்பில் ஆ.ராசா எம்.பி. சுட்டிக்காட்டிய முக்கியக் கருத்துகள்,

அரசியல் நிர்ணய சபை முடிவு
“பக்கீம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசத்தைப் பற்றியது. மீதமுள்ள பத்திகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாக 1930-களிலேயே சர்ச்சை எழுந்தபோது, மகாத்மா காந்தி, பண்டித நேரு, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஷியாம பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து முதல் இரண்டு பத்திகளை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது
அரசியல் நிர்ணய சபையின் இறுதி நாளில் பாடப்பட்டதும், இன்றுவரை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் (PIB) உள்ளதும் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே. ஆனால், தற்போதைய பா.ஜ.க. அரசு முழுப் பாடலையும் கட்டாயமாக்கி, மீறினால் சிறை தண்டனை என அறிவிப்பது அரசியல் நிர்ணய சபையின் முடிவிற்கே எதிரானது.”தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

“தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம்!”
தி.மு.க.வின் தொலைநோக்குப் பார்வையையும் நாகரிகத்தையும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தபோது, அதில் ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து’ என்ற வரி இடம்பெற்றிருந்தது. அது ஒரு மொழியையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரையோ புண்படுத்திவிடக் கூடாது என்ற உயர்ந்த பண்பாட்டோடு, அந்த வரியை நீக்கிவிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை அரசுப் பாடலாக கலைஞர் நடைமுறைப்படுத்தினார். கலைஞர் காட்டிய அந்த நாகரிகமும் பண்பாடும் தற்போதைய பா.ஜ.க. அரசிடம் துளியும் இல்லை.”

“மத ரீதியான பிளவை உருவாக்கவே சதி!”
இந்திய தேசியம் என்பதை மாற்றி, மத ரீதியான பிளவை உண்டாக்கும் நோக்கிலேயே பா.ஜ.க. இந்த மசோதாவை அவசர அவசரமாகக் கொண்டுவந்து நிறைவேற்றத் துடிக்கிறது. நாடாளுமன்றத்தில் இதற்காகத் தான் கொண்டுவந்த திருத்தங்களை விவாதிக்கக்கூட விடாமல் மைக்கை துண்டித்து, அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற முயல்வதாக ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

த.வெ.க.விற்கு மதிமுக ராணுவத்தைப் போல உறுதுணையாக நிற்கும்: வைகோ பேச்சு!

MUST READ