
டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் மீது பதிவுச் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இன்று (மே 09) தீர்ப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா வாக்கர், கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக உடலை வெட்டி டெல்லியில் பல பகுதிகளில் வீசப்பட்டிருந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, ஸ்ரத்தா வாக்கரின் காதலன் அஃதாப் புனாவாலா (Aftab Poonawala) கைது செய்யப்பட்டார்.
மனோபாலாவுக்காக மகன் பாடிய கடைசி பாடல்… கண்கலங்க வைக்கும் தருணம்!
அவர் மீது கொலை, தடயங்களை அளித்தல் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்ட நிலையில், 6,629 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த சூழலில், அஃதாப் புனாவாலா மீது பதிவுச் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டெல்லி நீதிமன்றம் இன்று (மே 09) தீர்ப்பு வழங்குகிறது.