கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5,600 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி, சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் காரணமாகத் தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.


அதன்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200 என்ற விலையை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்குக் ஒட்டுமொத்தமாக ரூ.5,600 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகது.
தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தைச் சந்தித்து வருவது, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!
