Homeசெய்திகள்க்ரைம்கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! -...

கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! – பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை

-

- Advertisement -

கோவையில் கடந்த 11 நாட்களில் கல்லூரி மாணவர் மற்றும் பெண் உள்பட நான்கு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சமீபத்திய சம்பவமாக, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு புகுந்து 58 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! - பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ராஜா வெல்டிங் வேலை செய்து வருகிறார். சாந்தி அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். தாயும் மகனும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

we-r-hiring

வழக்கம்போல் நேற்று காலையில் மகன் ராஜா வேலைக்குச் சென்றுள்ளார்; சாந்தியும் வேலைக்குச் சென்றுவிட்டதாகக் தெரிகிறது. இந்நிலையில், மதியம் வீட்டிற்குத் திரும்பிய சாந்தி, அதன் பிறகு இரவு வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது சாந்தி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மகன் ராஜாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த ராஜா, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

போலீசாரின் தீவிர விசாரணை:
சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சாந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்கள் தீவிரமாகச் சேகரிக்கப்பட்டன.

கொலைக்கான காரணம் என்ன: வீட்டிலிருந்த நகையோ அல்லது பணமோ எதும் மாயமாகவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், நகை திருட்டுக்காக இக்கொலை நடந்ததா அல்லது முன்விரோதமா? வீட்டிற்கு வேறு யாராவது வந்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிசிடிவி ஆய்வு: பாப்பநாயக்கன்பாளையம் சாலை மற்றும் அப்பகுதியைச் சுற்றி உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, கொலையாளிகள் வந்த வழி குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

11 நாட்களில் 4 கொலைகள் – தொடரும் அச்சம்:
கோவையில் கடந்த 11 நாட்களுக்குள் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட ஒரு பெண் மற்றும் இருவர் என அடுத்தடுத்து நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சட்டம்-ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், கோவை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி

MUST READ