spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை"- உச்சநீதிமன்றம் அதிரடி!

“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!

-

- Advertisement -

 

"ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை"- உச்சநீதிமன்றம் அதிரடி!
File Photo

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப் பிறப்பித்ததை எதிர்த்து 16 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

we-r-hiring

“மணிகண்டன் கொண்டாடப்பட வேண்டியவர்”… மனதாரப் பாராட்டிய பாடகி சின்மயி!

அதேபோல், ஷிண்டேவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து உத்தவ் தாக்கரேவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒன்றாக விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (மே 11) தீர்ப்பளித்துள்ளது.

அதில், “ஏக்நாத் ஷிண்டே குழுவினர் தாங்களாகவே சட்டமன்ற கொறடாவை நியமித்தது சரியல்ல. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால், முந்தையை நிலையை மீட்டெடுக்க முடியாது.

‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி!

பா.ஜ.க.வுடன் கைக்கோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு அழைப்பு விடுக்க மகாராஷ்டிரா மாநில ஆளுநரிடம் போதுமான காரணங்கள் இல்லை. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், பழைய நிலையை மீட்டெடுக்க முடிந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ