தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெக அமைச்சர் எம்.ஆர். பல்லவி தனது பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்க வந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு அவர் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வருகை
சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த எம்.எல்.ஏ. பல்லவி, தனது பச்சிளம் குழந்தையைச் சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் பராமரிப்பாளர் மேற்பார்வையில் விட்டுவிட்டுச் சபை நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார்.

முன்னதாக, சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துத் தனது குழந்தையைக் காட்டியபோது, அவர் குழந்தையை வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகப் பேசப்பட்டன.
சமூக வலைதள விமர்சனம்
குழந்தையைச் சட்டமன்றத்திற்கு அழைத்து வந்த இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் சிலர் இது வெறும் “காட்சிப்படுத்தல்” அல்லது கவனத்தை ஈர்ப்பதற்கான “நாடகம்” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
எம்.எல்.ஏ.வின் கண்டனம்
இந்த விமர்சனங்களுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளித்த எம்.எல்.ஏ. பல்லவி, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.
அவசியமான சூழல்: பச்சிளம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு எப்படி வர முடியும்? சற்று யோசித்துவிட்டு உங்களது கருத்துகளைத் தெரிவியுங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவதூறுகளுக்கு எதிர்ப்பு: மற்றவர்களின் சூழலையோ சிரமத்தையோ புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் தயவுசெய்து தவறான தகவல்களை ட்வீட் செய்யாதீர்கள் அல்லது இழிவாகப் பேசாதீர்கள் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: தவெக அரசின் நிலைப்பாடு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!
