spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்"- அண்ணாமலை பேட்டி!

“என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்”- அண்ணாமலை பேட்டி!

-

- Advertisement -

 

"என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்"- அண்ணாமலை பேட்டி!
Photo: ANI

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (மே 12) மதியம் 12.45 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பா.ஜ.க. வரவேற்கிறது.

we-r-hiring

இன்றைய ஆட்டத்தில் மும்பை – குஜராத் மோதல்

அதிக அளவில் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பம் என்பதால், டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடா? டி.ஆர்.பாலு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக் கொள்ள மாட்டேன். தமிழக அரசு ஓராண்டில் மூன்று முறை ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளது. அரசு வழக்கறிஞர் மூலமும் என் மீது வழக்கு போடுங்கள்; எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

என் மீது அவதூறு வழக்கு நகைப்புக்குரியது; நீதிமன்றத்தில் நிற்காது. ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய தி.மு.க.வின் இரண்டாவது சொத்து பட்டியல் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ராஜஸ்தான் வீரர் புதிய சாதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ