Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!

காவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!

-

- Advertisement -

காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது.காவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!

ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை ஏற்பு
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) முன்வைத்த பரிந்துரைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இரு மாநிலங்களின் நீர் இருப்பு, மழைப் பொழிவு மற்றும் தேவைகளைக் கணக்கில் கொண்டு ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மேலாண்மை ஆணையம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

we-r-hiring

தமிழ்நாட்டின் கோரிக்கை
ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், குறுவை சாகுபடி மற்றும் விவசாயிகளின் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தினசரி கூடுதலான தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கர்நாடகாவிற்கு உத்தரவு
தமிழ்நாட்டின் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கர்நாடகா தன் வசம் உள்ள அணைகளில் இருந்து பிலிகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார்.  மேலாண்மை ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, தமிழக விவசாயிகளிடையே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான சட்டமன்றம்! “பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டவன் நான்!” — தவெக உறுப்பினர் மதார் பதூருதீன் உதிர்த்த ஆவேச வார்த்தைகள்!

MUST READ