ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் அதிரடி வியூகம் – முதல்வர் யார்?
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரஞ்சித் சிங் வாலா ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
தொங்கு சட்டமன்றம் அமைந்தால் காங். எம்எல்ஏக்களை ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கவும் அல்லது தமிழகத்திற்கு அழைத்து செல்லவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகமாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் வெற்றி உறுதியானது. கனகபுரா தொகுதியில் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமாரை தேர்வு செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அதேசமயம் கர்நாடக முதலமைச்சர் பதவியை எனது தந்தைக்கு தரவேண்டும் என சித்தராமையாக மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இதனிடையே மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கோட்டையான மைசூரு, மாண்டியாவில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திவருகிறது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடக அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஸ்ரீராமலு பெல்லாரி புறநகர் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளனர். இதேபோல் கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோச் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குல்கர்னி 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.