கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம். இக்கிராமத்தில் நேற்று இரவு கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் அந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள் . சாராயம் குடித்த கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி , மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல் உடனே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 16 பேரையும் விட்டு மரக்காணம், முண்டியம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் 16 பேரையும் சேர்த்துள்ளனர். 16 பேருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வந்திருக்கிறது . இதில் புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கர் ,தரணிவேல், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளச்சாராய வியாபாரி அமரனை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் . ஆனாலும் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்தால், மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் திமுக அரசு இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்து இருப்பதால் கள்ளச்சாராயத்தை தடை செய்ய வேண்டும் உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.