Homeசெய்திகள்சென்னைகொளத்தூர் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கொளத்தூர் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.கொளத்தூர் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

வாக்காளர் இயந்திர சரிபார்ப்பில் முறைகேடு குற்றச்சாட்டு
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்த்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மு.க. ஸ்டாலின் தரப்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நூறு சதவீத இயந்திரங்களையும் முறையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ காலக்கெடுவான 45 நாட்களுக்குப் பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாக ஸ்டாலின் தரப்பில் பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், “சில குறிப்பிட்ட காரணங்களால் தான் வழக்கு தொடர்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை; அதற்கு மனுதாரரான நாங்கள் எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்?” என்றும் வாதிடப்பட்டது.கொளத்தூர் தவெக வேட்பாளர் வெற்றிக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் நிலைப்பாடு
இம்மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “ஒரு எம்.எல்.ஏ.-வின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதுபோன்ற மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், இதே போன்ற கோரிக்கைகளுடன் மேலும் பல வழகுகள் தொடரப்பட வாய்ப்பull உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி பார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றொரு வழக்கை மு.க. ஸ்டாலின் தரப்பு வாபஸ் பெற்றது. அதேசமயம், அந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்துப் புதிதாக வழக்கு தொடரத் தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

MUST READ