கடந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை; நமது ஆட்சியில் தான் பணிகள் நடக்கின்றன என அமைச்சர் பேச்சு
திருச்சி மாவட்டத்தில் அடிப்படை கழிப்பிட வசதிகள் இன்றி ஒரு கிராமமே தனித்து விடப்பட்டிருந்ததாகத் தவெக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் உடனடி பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான விவாதத்தின் போது நடைபெற்ற காரசார விவாதம்:
அமைச்சர் ரமேஷ் முன்வைத்த குற்றச்சாட்டு:
திருச்சி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நீண்ட காலமாக அடிப்படை கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அவர்கள் கடந்த திமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த ஊர் மக்கள் அடைந்த விரக்தியின் காரணமாக என்னைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும், வேட்பாளரையும் ஊருக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. அப்போதே அவர்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அதன்படி, இன்றைக்குத் தவெக ஆட்சி அமைந்தவுடன் அந்த கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என்று பேசினார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் பதிலடி:
அமைச்சரின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்து எழந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு:
திருச்சி மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர், கழிப்பிட வசதிகள் அனைத்து ஊராட்சிகளிலும் தங்கு தடையின்றிச் செய்து தரப்பட்டுள்ளன.
ஒரு சில இடங்களைக் குறிப்பிட்டு ஒட்டுமொத்த ஆட்சியையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காகப் பேசப்பட்ட விஷயங்களைச் சட்டமன்றப் பதிவில் ஏற்றிப் பொய் பிரச்சாரம் செய்யக் கூடாது.
திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்குச் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளின் பட்டியல் மக்களிடம் தெளிவாக உள்ளது எனக் காரசாரமாகப் பதிலளித்தார்.
அமைச்சரின் குற்றச்சாட்டும் அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த பதிலடியும் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
