Homeசெய்திகள்தமிழ்நாடு"மதம் மாறியாச்சு.. ஆனா இந்துன்னு சொன்னா எப்படி?" - ஆசிரியர் மனு தள்ளுபடி! உயர் நீதிமன்ற...

“மதம் மாறியாச்சு.. ஆனா இந்துன்னு சொன்னா எப்படி?” – ஆசிரியர் மனு தள்ளுபடி! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு, மீண்டும் தாய் மதத்திற்கு (இந்து மதம்) திரும்பியதற்கான முறையான ஆதாரம் இல்லாத பட்சத்தில், எஸ்சி – எஸ்சி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது."மதம் மாறியாச்சு.. ஆனா இந்துன்னு சொன்னா எப்படி?" - ஆசிரியர் மனு தள்ளுபடி! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி செவந்த் டே அட்வென்டிஸ்ட் (SDA) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி ஆசிரியராக ரவிகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளிப்பட்டி பள்ளி முதல்வர் அருளானந்தன்கோவில், அம்புரோஸ், டேனியல் ஜேம்ஸ் மற்றும் எமர்சன் டேவிட் ஆகியோர் மீது சாதி ரீதியான பாகுபாடு மற்றும் அவமதிப்பு புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ரவிகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில், “நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் பணியாற்றும் மேல் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்னையும், பிற பட்டியலின ஆசிரியர்களையும் பாகுபாட்டுடன் நடத்தி அவமானப்படுத்தினர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

we-r-hiring

அவையில் நீதிபதி எல்.விக்டோரியா கெளரி உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கெளரி, மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த விரிவான உத்தரவில் தெரிவித்ததாவது, “மனுதாரர் எஸ்.டி.ஏ (SDA) திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் ஒரு ‘இந்து’ எனக் குறிப்பிட்டுள்ளார். பட்டியல் சாதி அந்தஸ்தின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை கோரும் இந்த வழக்கில், தனது ஞானஸ்நானம் மற்றும் பிற்கால தேவாலயப் பங்கேற்பை அவர் மறைத்துள்ளார். நீதிமன்றத்தை அணுகும் நபர் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிப்பதற்கு, பாதிக்கப்பட்ட நபர் சாதி ரீதியாக வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது அச்சுறுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்தச் சம்பவம் பொதுவெளியில், பிறர் பார்க்கும் இடத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், மனுதாரர் தனது புகாரில் சாதி ரீதியாக அவமதிக்கப்பட்டதாகக் கூறும் தேதி, இடம் அல்லது யார் முன்னிலையில் நடந்தது என்பது பற்றிய எந்த விவரத்தையும் குறிப்பிடவில்லை.”

நிர்வாக நடவடிக்கையை துன்புறுத்தல் எனக் கூற முடியாது
தொடர்ந்து பேசிய நீதிபதி, “தற்காலிக பணிநீக்கம், இடமாறுதல் மற்றும் பணியிடத்தில் வசதிகள் மறுக்கப்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளே புகாரில் உள்ளன. பள்ளி நிர்வாகத்தின் சாதாரண நிர்வாக நடவடிக்கைகளை ‘துன்புறுத்தல்’ எனக் கூறி காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.

சிறப்புத் தண்டனைச் சட்டங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே செயல்படுத்த வேண்டும். இத்தகைய சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவது இரு தரப்பினருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சட்டத்திற்கு உண்மையாக இருப்பது என்பது சமூக நீதிக்கு உண்மையாக இருப்பதாகும். பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு, மீண்டும் பழைய மதத்திற்குத் திரும்பியதற்கான முறையான சான்றுகள் இல்லாத நிலையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோர முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த ‘பஞ்ச்’ பதில்!

MUST READ