Homeசெய்திகள்இந்தியாஅமலாக்கத்துறை ரெய்டு புயல்: கணக்கில்லாத தங்கம், பணத்தால் அதிரடி ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர்...

அமலாக்கத்துறை ரெய்டு புயல்: கணக்கில்லாத தங்கம், பணத்தால் அதிரடி ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்!

-

- Advertisement -

உத்தரகண்ட் அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் புகாரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளைத் துறந்துள்ளார். அவரது நெருங்கிய உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை (ED) நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆடம்பரக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சோதனையில் சிக்கிய சொத்து மலை:

  • அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை: பணமோசடி வழக்கில் உத்தர்கண்ட் துணைப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஹரிஷ் ராவத்துடன் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தினர்.

  • பறிமுதல் செய்யப்பட்டவை: ஹரிஷ் ராவத்தின் முன்னாள் தனி அதிகாரி மற்றும் நம்பிக்கைக்குரிய உதவியாளரான சந்தன் சிங் ஜீனா இல்லத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத ரொக்கம், பதுக்கி வைக்கப்பட்ட தங்கம் மற்றும் சர்வதேச பிராண்டட் ரோலக்ஸ், ராடோ போன்ற ஆடம்பரக் கடிகாரங்கள் சிக்கின.

தப்பியோட முயன்ற ஹரிஷ் ராவத் – அதிரடி ராஜினாமா!

உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட இந்த அதிரடிப் பறிமுதல்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட கடும் அழுத்தத்தையடுத்து ஹரிஷ் ராவத் தனது பொறுப்புகளைத் துறந்துள்ளார்.

தான் வகித்து வந்த காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளர் மற்றும் பிரதேச செயற்குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள அவர், “கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை உலுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்:

தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் உச்சக்கட்டத் தலைவர் ஒருவரின் முகத்தில் விழுந்த இந்த கரியூலம், அரசியல் அரங்கில் ஆளும் தரப்புக்குத் தீவிர ஆயுதமாக மாறியுள்ளது. ஊழலை ஒழிப்பதாக மார்தட்டும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரே முறைகேடு புகாரில் சிக்கியிருப்பது பொதுமக்களிடையே கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறிவரும் இந்தச் சூழலில், அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை யாரை நோக்கிப் பாயும் என்ற பதற்றம் அரசியல் வட்டாரத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது.

“ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முக்கியத் தலைவர்களின் முகமூடிகளை அமலாக்கத்துறையின் அதிரடிச் சோதனைகள் ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்து வருகின்றன.”

MUST READ