spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்

ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்

-

- Advertisement -

ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்

மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் போராடினால் நாங்களும் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லிஸ்ட்லயே இல்லையே..இதென்னப்பா புது ட்விஸ்ட்-கோர்ட்டில் ஜெயித்த இபிஎஸ்க்கு  திருமாவளவன் திடீர் வாழ்த்து! | DMK Ally VCK Chief Thol. Thirumavalavan  wishes Edappadi ...

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மதுவிலக்கை வலியுறுத்தி நாங்கள் போராட வேண்டும் என்பது சரிதான். இல்லை என்று சொல்லவில்லை. அவ்வப்போது மதுவிலக்கு குறித்து எங்கள் கருத்தை தெரிவித்துவருகிறோம். ஆனால் அஎதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மதுவிலக்கிற்காக இதுவரை என்ன போராட்டம் நடத்தியுள்ளார்? அவர் போராட்டம் நடத்துவாரேயானால் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

we-r-hiring

தமிழ்நாடு அரசு மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை தீவிரிப்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தி கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுபான வணிகம் நடக்கும்போது கள்ளச்சாராய விநியோகம் இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேநேரம் மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை செயல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று காரணம் சொல்லி அரசே மது வணிகம் செய்வதும், அதே நேரம் கள்ளச்சாராய புழக்கத்தை கண்டும், காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

MUST READ