Homeசெய்திகள்க்ரைம்சென்னை செனாய் நகரில் அதிர்ச்சி: குடும்பத் தகராறில் மாமனாரை ஏர்கன்னால் சுட்ட மருமகன் கைது!

சென்னை செனாய் நகரில் அதிர்ச்சி: குடும்பத் தகராறில் மாமனாரை ஏர்கன்னால் சுட்ட மருமகன் கைது!

-

- Advertisement -

சென்னை செனாய் நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்ற மோதலில், மாமனாரை ஏர்கன் (Air Gun) துப்பாக்கியால் சுட்ட மருமகனை அண்ணா நகர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை செனாய் நகரில் அதிர்ச்சி: குடும்பத் தகராறில் மாமனாரை ஏர்கன்னால் சுட்ட மருமகன் கைது!

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் (46). இவருக்கும் இவரது மனைவி ப்ரீத்தி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, கடந்த ஆண்டு ப்ரீத்தி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செனாய் நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.  மனைவி பிரிந்து சென்ற சோகத்தாலும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டு வந்த ஸ்ரீஜித், பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

we-r-hiring

மாமனார் வீட்டில் அரங்கேறிய வெறிச்செயல்

இந்த நிலையில், நேற்று செனாய் நகரில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீஜித், அங்கே மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டும் வகையில் செயல்களில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த பாயைக் கொளுத்தி வீட்டைப் பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தான் மறைத்து எடுத்துவந்திருந்த ஏர்கன் துப்பாக்கியைக் கொண்டு தனது மாமனார் விஜயகுமாரை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் சுட்ட குண்டுகள் விஜயகுமார் மீது படாமல், சமையலறைச் சுவரில் பட்டு கீழே விழுந்தன. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

துப்பாக்கிகள் பறிமுதல் மற்றும் கைது

சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், தகவலறிந்து விரைந்து வந்த அண்ணா நகர் காவல் நிலைய அதிகாரிகளும் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவிர விசாரனைக்குப் பிறகு ஸ்ரீஜித்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து இரண்டு ஏர்கன் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். குடும்பத் தகராறு முற்றி மருமகனே மாமனாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

MUST READ