Homeசெய்திகள்தமிழ்நாடுஜெம் வீரமணி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை!

ஜெம் வீரமணி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை!

-

- Advertisement -

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணிக்குத் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஜெம் வீரமணி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை!

சோதனையின் பின்னணி பணப் பரிவர்த்தனை விசாரணை:
இச்சம்பவத்தில் சுமார் ₹70 கோடி வரை பெருமளவிலான நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும், வழக்கை மூடிமறைக்க அல்லது விசாரணையைத் திசைதிருப்ப முயன்ற கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன.

we-r-hiring

ஆதாரங்கள் சேகரிப்பு: இந்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றும் நோக்கத்திலும், வழக்கில் தொடர்புடைய பல உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் வீரமணி வழக்கில் நாள்தோறும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் அரசியல் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை!

MUST READ