Homeசெய்திகள்அரசியல்தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்!" — கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி!

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்!” — கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி!

-

- Advertisement -

திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரம்: பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு!தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்!" — கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி!தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அலங்கியம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு
வெள்ளிக்கிழமையான இன்று, அலங்கியம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியப் பெருமக்களை முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

we-r-hiring

திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு: ஆட்சி மாற்றத்திற்கு இதுவே தொடக்கம்!
வாக்கு சேகரிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

தாராபுரம் தொகுதியில் நுழையும் இடமெல்லாம் திமுகவுக்கு பொதுமக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். செல்லும் வழியெங்கும் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு மாபெரும் தொடக்கமாக அமையும்.”

மக்கள் புகார்களுக்குத் தீர்வு காணப்படும்
தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்:

மக்கள் கோரிக்கைகள்: நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு, சீரற்ற மின் விநியோகம், மின்வெட்டு மற்றும் தாங்க முடியாத விலைவாசி உயர்வு குறித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சி மாற்றம்: மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்க எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனடியாகத் தீர்வு காணப்படும் என உறுதியளித்து வருகிறோம்.”

புதிய தலைமைச் செயலகத் திட்டம் தேவையற்றது
அரசு அண்மையில் திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்துப் பேசிய அவர்:

மீனவர்கள் வசிக்கும் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது தற்போதைய சூழலில் முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். குறிப்பாக, மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அந்த அமைவிடம் திட்டமிடப்பட்டுள்ளதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்தும் இதுவேயாகும், என்று தெளிவுபடுத்தினார்.

இந்தப் பிரச்சார நிகழ்வில் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.

சத்தியபாமா ராஜினாமா செய்யலனா நாங்க ஏன் இங்க வரப்போறோம்?” — திருப்பூர் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் அதிரடி!

MUST READ