spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லால் சலாம்' படத்திற்காக கபில் தேவ் உடன் இணைந்து நடித்த ரஜினி!

‘லால் சலாம்’ படத்திற்காக கபில் தேவ் உடன் இணைந்து நடித்த ரஜினி!

-

- Advertisement -

லால் சலாம் படத்திற்காக கபில் தேவ் உடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்.

ரஜினி தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக நேற்று விமானத்தில் சென்னை பறந்துள்ளார் ரஜினி.

we-r-hiring

இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

laal-salaam-33.jpg

லால் சலாம் படத்தில் நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர்‌ ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் கிரிக்கெட் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்காக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடன் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்

“இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில் தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ