
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று (மே 19) தொடங்குகிறது. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று முதல் மே 21- ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உச்சி மாநாடு நடைபெறுகிறது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஜி7 மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா , தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏழு நாடுகளும் கலந்து கொள்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால், ஹிரோஷிமா நகரம் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 19) தொடங்குகிறார். ஜி7, குவாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறார்.
மே 22- ஆம் தேதி பப்புவா நியூகினியா செல்லும் பிரதமர், இந்திய- பசிபிக் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் அந்நாட்டு பிரதமர் ஆண்டனி ஆல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்லும் நிலையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் மீண்டும் ஃபுமியோவைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவைப் பற்றி ஜி7 மாநாட்டில் கருத்து பரிமாற்றத்தை எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


