Homeசெய்திகள்தமிழ்நாடு‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு நன்றி – திருமாவளவன்

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு நன்றி – திருமாவளவன்

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு வகையான பேருந்துகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று விசிக சார்பில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல்-அமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இத்திட்ட விரிவாக்கத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்திருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். இது விசிக முன்வைத்த சமூகநீதிக் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவாக்கத்தில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட, UDID அட்டை வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட வகை பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டிய நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி அக்.15-ல் சென்னையில் இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

MUST READ