Homeசெய்திகள்சினிமா“சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் எனக்கு தொடர்பில்லை” – நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்!

“சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் எனக்கு தொடர்பில்லை” – நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்!

-

- Advertisement -

சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றம் மற்றும் வரி முறைகேடு தொடர்பான தகவல்களில் தனது பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னை தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், வருமான வரித்துறை சோதனை தனக்கு தொடர்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மும்பையில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி வருமான வரித்துறையினர் திரைப்படத் துறையைச் சேர்ந்த சில நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 இடங்களில் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. திரைப்படத் தயாரிப்புக்கான நிதி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டதா என்பது உள்ளிட்ட நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனைகள் தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் பெயரும் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதையடுத்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “சோதனை எனக்கு தொடர்புடையது அல்ல” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தவொரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலோ சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் ரகுல் கூறியுள்ளார். இந்தியாவிலோ வெளிநாட்டிலோ வேறு யாருக்காகவும் பினாமி சொத்துகளை வைத்திருக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தனது பின்னணி குறித்தும் பேசியுள்ள ரகுல், ராணுவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், திரையுலகில் தனக்கு எந்தவிதமான ‘காட்ஃபாதர்’ ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறியதாகவும், 20 வயது முதல் முறையாக வரி செலுத்தி வரும் சட்டத்தை மதிக்கும் குடிமகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பற்றி சரிபார்க்கப்படாத மற்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றைத் திரும்பப் பெற்று உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ரகுல் வலியுறுத்தியுள்ளார். வணிக ரீதியான அழுத்தங்கள் இருந்தாலும், அது ஒருவரின் நற்பெயர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தவறான தகவல்களை வெளியிடுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ரகுல் ப்ரீத் சிங் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“வாழா என் வாழ்வை வாழவே…” – 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘96’!

MUST READ