Homeசெய்திகள்சென்னைரங்கநாதன் தெருவில் தொடரும் திருட்டு: ரூ.12 ஆயிரம் துணிகளுடன் பையை தூக்கிய மூதாட்டி

ரங்கநாதன் தெருவில் தொடரும் திருட்டு: ரூ.12 ஆயிரம் துணிகளுடன் பையை தூக்கிய மூதாட்டி

-

- Advertisement -

சென்னை தியாகராயநகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ரங்கநாதன் தெருவில் சிறிய அளவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து புடவை, குவீன் வியாபாரம் செய்து வருகிறார்.

we-r-hiring

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். கடையை திறந்து துணிகள் இருந்த பெரிய பைகளை, ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். 3 முறையாக கடை உள்ளே சென்று விட்டு வெளியே வந்த போது ஒரு பையை காணவில்லை.

அதில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகள் இருந்துள்ளன. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது ரங்கநாதன் தெருவில் அடிக்கடி கைவரிசை காட்டிவிட்டு இதுவரை சிக்காமல் இருக்கும் மூதாட்டி, துணிகள் இருந்த பெரிய பையை திருடிச் செல்வது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார்

ரங்கநாதன் தெருவில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதை வெளியில் சொன்னால், கடை வாசலில் துணிகளை வைத்து தீபாவளி பண்டிகையின் போது வியாபாரம் செய்ய முடியாது என போலீசார் மிரட்டுவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனை மாணவியர் விடுதியில் நகை திருட்டு..! டாக்டர் போல சுற்றித்திரிந்த பெண் சிக்கினார்

MUST READ