
வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
சென்னையில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவரது நூற்றாண்டு விழா தொடங்கும் ஜூன் 3- ஆம் தேதி அன்று வடசென்னையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், ஜூன் 20- ஆம் தேதி அன்று திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விற்பனையைத் தொடங்கும் ஆவின் நிறுவனம்!
முழு நாள் நிகழ்வாக, கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வரும் ஜூன் 20- ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


