spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
Photo: CM MKStalin

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!

இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாமிநாதன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா எம்.பி. திருச்சி சிவா எம்.பி. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!

கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர். அதேபோல், கட்சியின் வளர்ச்சி, வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ