spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிரைத்துறையில் நடிகர் சரத்பாபு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!

திரைத்துறையில் நடிகர் சரத்பாபு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!

-

- Advertisement -

 

திரைத்துறையில் நடிகர் சரத்பாபு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!
File Photo

பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சரத்பாபு சிகிச்சைப் பலனின்றி இன்று (மே 22) உயிரிழந்தார்.

we-r-hiring

அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு…. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சரத்பாபுவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறையில் நடிகர் சரத்பாபு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!

கடந்த 1951- ஆம் ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் சரத்பாபு. சினிமா மீதான ஆர்வம் காரணமாக, கடந்த 1973- ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. தமிழில் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘நிழல் நிஜமாகிறது’ என்ற படத்தில் அறிமுகமானார். ரஜினியுடன் முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரம்பா மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கமல்ஹாசனுடன் சட்டம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்டப் திரைப்படங்களில் சரத்பாபு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சரத்பாபு சுமார் 50 ஆண்டுகள் திரைத்துறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆந்திர மாநில அரசின் உயரிய விருதான நந்தி விருதை, கடந்த 1981, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை வென்றுள்ளார்.

MUST READ