Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

-

- Advertisement -

நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

school holiday tamil nadu

மேலும், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதியும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.

we-r-hiring

இதனிடையே நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 3ம் வாரத்தில் நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி , 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிச.15 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. 6,8,10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முற்பகலிலும், 7,9,11ம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற்றுவருகிறது

இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச. 23-ம் தேதி வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.19 முதல் டிச.23-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு பிறகு, டிச.24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 2-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

MUST READ